முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மது ஒழிப்பு மாநாடு: முறையாக அழைப்பு வந்தால் பங்கேற்பது குறித்து முடிவு: எடப்பாடி பழனிசாமி தகவல்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் அ.தி.மு.க. கலந்து கொள்வது குறித்து மூத்த தலைமை  நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு வி.சி.க. அழைப்பு விடுத்திருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் வி.சி.க. மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வது குறித்து மூத்த தலைமை நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர்  பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். 

மாற்றுக் கட்சியில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் அ.தி.மு.க. கலந்து கொள்வது குறித்து மூத்த தலைமை  நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் தி.மு.க. மட்டும் தான் எங்களுக்கு எதிரணி. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர நல்ல மனம் உடையவர்கள் அ.தி.மு.க.வுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வந்தால் இணைத்துக் கொள்ளவும் அவர்களுடன் சேர்ந்து அ.தி.மு.க. சிறந்த ஆட்சியை கொடுக்கும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து