எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் 1.39 லட்சம் இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்தும், அதன் மூலம் மாநிலத்துக்கு கிடைத்த தொழில் முதலீடு குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தன. இந்நிலையில், அது தொடர்பாக விளக்கம் அளித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொழில் வளர்ச்சிக்கு அளித்து வரும் அளப்பரிய ஊக்கம் காரணமாகப் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் மாநிலத்தில் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் இளைஞர் சமுதாயத்தினர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
2021-ம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய பின் 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு, புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.
மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக, 631 ஒப்பந்தங்கள் மூலம் 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின் மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டன.
நான்காம் கட்டமாக, ஜனவரி 27, 2024 அன்று புறப்பட்டு ஸ்பெயின் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன் வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அவற்றின் பயனாக ரூ.3,440 கோடி ரூபாய் அளவிற்குத் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
5-வது கட்டமாக, முதல்வர் ஸ்டாலின், 22-9-2024 அன்று அமெரிக்கா பயணம் மேற்கொண்டு உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகளையும் ஆற்றல் வாய்ந்த மனித வளங்களையும் எடுத்துரைத்து தொழில் தொடங்கிட வருமாறு அழைப்பு விடுத்தார்கள். அதன் பயனாக அமெரிக்காவில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 11,516 புதிய வேலை வாய்ப்புககள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 21-8-2024 அன்று, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் 19 தொழில்சாலைகளைத் திறந்து வைத்துள்ளார்.
19 புதிய தொழிற்சாலைகளை தொடங்கி வைத்ததுடன், அதே நாளில் முதல்வர் ஸ்டாலின் 51,157 கோடி ரூபாய் முதலீட்டிலான 28 புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அந்தத் தொழிற்சாலைகளின் வாயிலாக, 41 ஆயிரத்து 835 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இவற்றுடன், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதற்காக ராணிப்பேட்டைக்கு நேரடியாகச் சென்று அங்கு சிப்காட் பனப்பாக்கம் தொழிற் பூங்காவில் அடிக்கல் நாட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இத்தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 மார்ச் மாதம் நடைபெற்று 6 மாதங்களில் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது என்பது திராவிட மாடல் அரசு தொழில் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறைக்குச் சிறிய சான்றாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகளில் மொத்தம் 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கத்தக்க வகையில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு முதலில் 27 புதிய தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளது. அத்துடன் மேலும் 19 தொழிற்சாலைகள் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 46 புதிய தொழிற்சாலைகள் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக திராவிட மாடல் அரசின் தொழில் வளர்ச்சி சாதனைகள் இந்திய அளவில் சிறந்து விளங்குகின்றன இதனை ஓரிரு நாட்களுக்கு முன் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: ஒரேநாளில் சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்தது
02 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600 அதிரடியாக குறைந்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ.
-
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது எதனால்? புள்ளி விவரங்களுடன் அமைச்சர் ரகுபதி விளக்கம்
02 Feb 2026சென்னை, பா.ஜ.க.வுக்கு வாக்குகள் விழாது என்பதால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துளளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பட்ஜெட் அறிவிப்பில் தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைக்காததால் ஏமாற்றம்
02 Feb 2026சென்னை, மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –02-02-2026
02 Feb 2026 -
தமிழ்நாடு முதல்வரின் காருக்கு வழிவிட சிக்னலில் நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்
02 Feb 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காருக்கு வழிவிட சிக்னலில் விஜய் கார் நிறுத்தப்பட்டது.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா: விஜய் பங்கேற்று பேச்சு
02 Feb 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் நேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசிய அதன் தலைவர் விஜய், தீய சக்தியை வீழ்த்த தூய சக்தியான தமிழக வெற்றிக்கழகத
-
சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றி போர்முரசம் த.வெ.க.: விஜய்
02 Feb 2026சென்னை, சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் திராவிட மாடலின் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது: தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Feb 2026சென்னை, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் திராவிட மாடலின் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது என்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தி.மு.க.
-
தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா சார்பில் கடும் ஆட்சேபனை
02 Feb 2026பெய்ஜிங், தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது.
-
திருச்சியில் பிப். 21-ல் நா.த.க. மாநாடு: 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
02 Feb 2026சென்னை, நாம் தமிழர் கட்சியின் மாநாடு வருகிற 21-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று சீமான் அறிவித்திருந்தார்.
-
திடீரென மூச்சுத் திணறல்: நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
02 Feb 2026சென்னை, நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பில் நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
பாக். ராணுவம்-தீவிரவாதிகள் இடையே தொடரும் மோதல்: 200-க்கும் மேற்பட்டோர் படுகொலை
02 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் இருதரப்ப
-
மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்
02 Feb 2026சென்னை, மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான அடிப்படை வசதிகள் வழங்க ரூ.
-
சிகிச்சை அரங்கு கட்டிடம் கட்ட மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
02 Feb 2026சென்னை, மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடத்துக்கு ரூ.10 கோடி, மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.2 கோடி என மொத்தம் ரூ.12 கோடி நிதி உடனடியாக அறிவிக்க
-
திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை கலெக்டர்
02 Feb 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் மதுரை மாவட்ட கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
-
ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தனபால் கோரிக்கை
02 Feb 2026புதுடெல்லி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.
-
அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் அவகாசம்
02 Feb 2026சென்னை, பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் ஆண
-
பழனி முருகனுக்கு காவடி எடுத்த அண்ணாமலை
02 Feb 2026பழனி, தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பா.ஜனதா முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய பழனி வந்தார்.
-
ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
02 Feb 2026டாக்கா, இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனாவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறைத்தண்டன
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
02 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் தெப்பம், ரிசப வாகனம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாசி மண்டல உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
02 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
02 Feb 2026


