முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2024      தமிழகம்
Anbil 1

Source: provided

சென்னை : தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.  இந் நிலையில் தேர்வு தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்று ஒரு தேதியை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது., முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வழங்கிய ஆலோசனையின்படி, இன்று (14.10.2024) அன்று இந்த கல்வி ஆண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம்.  இவ்வாறு அந்த பதிவில் அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.

கடந்த முறை 10ம் வகுப்புக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 26ல் தொடங்கி, ஏப்ரல் 8ம் தேதி நிறைவு பெற்றது. 11ம் வகுப்பு தேர்வு மார்ச் 4ம் தேதி ஆரம்பித்து, மார்ச் 25ம் தேதி முடிந்தது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடந்தது. இம்முறையும் அதுபோலவே தேர்வு தேதிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து