முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் காவேரி மருத்துவமனையின் 4 அவசர கால கிளினிக்குகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      தமிழகம்
Chennai Airport

சென்னை, சென்னை விமானநிலையத்தில்  புதிதாக காவேரி மருத்துவமனையின் 4 கிளினிக்குகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையங்களான டெர்மினல் 1, 4 மற்றும் சர்வதேச முனையமான டெர்மினல் 2, சென்னை விமான நிலைய கார்ககோ பகுதி என மொத்தம் 4 இடங்களில் காவேரி மருத்துவமனை  புதிதாக அவசரகால சிகிச்சை மைய கிளினிக்குகளை துவக்கியுள்ளது. 

சென்னை விமான நிலையத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் பயணிக்க வருபவர்கள், சென்னைக்கு வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளில் யாருக்கேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு உடனடியாக காவேரி மருத்துவமனை கிளினிக்கில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும்.

அதே போல் பயணிகள் மட்டுமின்றி, விமான நிலைய மற்றும் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் உள்பட பல்வேறு துறை பணியாளர்கள், விமான சரக்கக ஊழியர்கள் யாருக்கேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கும் இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும். 

தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நபர்களுக்கு உதவ, இங்கு 2 ஆம்புலன்ஸ்கள் 24 மணி நேரமும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில்   காவேரி மருத்துவமனையின் புதிதாக துவங்கப்பட்ட 4 அவசரகால கிளினிக்குகளின் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி 4 கிளினிக்குகளின் செயல்பாடுகளைத் துவக்கி வைத்தார். இதில் காவேரி மருத்துவமனை நிறுவனரும் செயலாக்க தலைவருமான டாக்டர் சந்திரகுமார், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் ஷோபி, புல்லா, மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அருண்சிங், இ.கருணாநிதி எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து