முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      இந்தியா
Accident-1

Source: provided

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மஹோரின் கஞ்சோட் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் ஒன்று சாலையில் சறுக்கி, ஒரு மலையிலிருந்து உருண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் ஒரு சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர்கள் மஹோர் தாலுகாவை சேர்ந்த 40 வயதான மன்சூர் அகமது (ஆசிரியர்), அவரது 10 வயது மகள் உல்பத் ஜான், 42 வயதான குலாம் மொஹி உத் தின் மற்றும் அவரது 28 வயது மகன் பஷீர் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து