முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது : எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
RBU 2023-08-22

Source: provided

மதுரை : வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது என்று மதுரையில் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் எம்.எல்.ஏ.தெரிவித்தார்.

இது குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது-

அக்டோபர், நவம்பர்,டிசம்பர் மூன்று மாத காலங்களிலே நமக்கு வடகிழக்கு பருவமழை இருக்கும். தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னர் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் பெரும்பாலான இடங்களிலே 13-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் தமிழகத்தில் இன்று (நேற்று)கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்,மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பொழிந்து இருக்கிறது 

தற்போது வடகிழக்கு பருவமழையில் தமிழகத்தில் 34 பேர்கள் பலியாகி உள்ளதாக செய்திகள் வருகிறது. தமிழக முழுவதும் கடந்த மாதம் மழைக்கு மட்டும் 9 பெண்கள்,2  குழந்தைகள் 15 ஆண்கள்  பேர் பலியாகிவிட்டது என்பது நமக்கு ஒரு வேதனை தரக்கூடிய செய்தியாக நாம் பார்க்கிறோம்.அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படி எடுத்தார்கள் என்பதற்கு இந்த உயிரிழப்பு என்பது நமக்கு அதனுடைய தோல்வியை நமக்கு காட்டுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் வடகிழக்கு பருவமழை தோல்வி காரணத்தால் 34 பேர்கள் பலியாகி உள்ளனர். இந்த வடகிழக்கு பருவ மழையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எந்த உயிரிழப்புகள் இல்லாமல் எதிர்கொள்வோம் என்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்,அமைச்சர்களும் கூறினார்கள்.ஆனால் இன்றைக்கு நிலவரம் கலவரமாக மாறிவிட்டது.

ஆனால் இன்றைக்கு 34 பேர் பலி மட்டுமல்லாது. 500 கால்நடைகள் மழையால் இறந்து போய் உள்ளன.மழையால் 864 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது, அதேபோல் மழைநீரில் 89,000 ஏக்கர் வேளாண் பயிர்கள் மூழியுள்ளன, இதில் 5,856 ஏக்கர் பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன. 919 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்துள்ளது,முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று அரசு சொன்னது ஆனால் இன்றைக்கு உயிர் சேதம்,பொருள் சேதம் இன்றைக்கு எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மதுரையில் பெய்த இரண்டு நாள் மழைக்கே தத்தளித்தது, கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசியது ,பணியாளர்கள் இல்லை, மீட்பு பணியாளர்கள் இல்லை

இதனால் மீட்பு நடவடிக்கை இல்லை. அமைச்சர்கள் முகாமிட்டுள்ளார்கள் என்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தும் துறை வரியாக இடைவெளி ஏற்பட்டது.துறைக்குள் ஒருங்கிணைப்பு குழு அவசியம், ஆனால் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படவில்லை. துப்புரவு பணியாளர் பற்றாக்குறை,பம்பு செட் பற்றாக்குறை , கேபிள் மற்றும் பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்களை சரிவர மூடவில்லை இதனால் நீர் தேக்கம் ஏற்பட்டு மதுரையே ஸம்பித்தது இதற்கு முழுமையான தீர்வு காணப்படவில்லை.

இதற்கு முழுமையான தீர்வை காண தாழ்வான பகுதிகளை கண்டறிந்து கூடுதலாக கவனத்தை செலுத்த வேண்டும், அதேபோல் குழுக்களை தயார் நிலை அமைக்கப்பட வேண்டும், மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும் தற்போது அக்டோபர் மாதம் முடிந்து விட்டது நவம்பர் டிசம்பர் 2 மாதங்கள் உள்ளது.இந்த நவம்பர்,டிசம்பர் காலங்களில் இருக்கக்கூடிய சூழ்நிலையிலே இந்த அரசு விழித்துக் கொள்ளுமா?. முதலமைச்சர் துறை வாரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். ஆய்வு கூட்டம்,மற்றும் அறிக்கையால் மக்களை காப்பாற்ற முடியாது. களப்பணியால்தான் காக்க முடியும். விளம்பரம் வெளிச்சம் மக்களுக்கு பயன் தராது. வடகிழக்கு பருவமழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார்

ஆனால் அரசு காது கொடுத்து கேட்கவில்லை. இந்த அரசிடம் கனிவு ,அக்கறை இல்லை ஆனால் ஆணவ போக்குடன் உள்ளது இது அழிவுக்கு தான் கொண்டு செல்லும் இது மக்களுக்கு விடியல் தேடுகின்ற முயற்சியாக நமக்கு காணவில்லை மக்களை நீங்கள் கைவிட்டால் மக்களை உங்களை கைவிடும் காலம் நிச்சயம் வரும். இன்றைக்கு மக்களே அரசு காப்பாற்றாது,

நமக்கு நாமே காப்பாற்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது என்று கூறி வருகிறார்கள். ஆகவே வருகின்ற வடகிழக்கு பருவமழையில் முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து