எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பேசவைத்தது விவாதப் பொருளாகியுள்ளது.
டிரம்ப் - ஜெலன்ஸ்கி உரையாடலில் எலான் மஸ்க்கும் இடம்பெற்றார் என்பதை உக்ரைன் நாட்டின் உயர் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க்கை எனது தலைமையிலான அரசில் முக்கிய பொறுப்பில் அமர வைப்பேன் என்று டிரம்ப் எற்கெனவே கூறியிருந்தார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான உரையாடலின் போது, எலான் மஸ்க்கையும் டிரம்ப் பேச வைத்திருக்கிறார். இது புதிய அரசில் எலான் மஸ்க் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெறுவார் என்பதை உணர்த்துகிறது.
முன்னதாக, அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் அரசியல் குறித்து சில கருத்துகளை எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இது குறித்து எலான் மஸ்க், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது. அடுத்து நடைபெறவுள்ள கனடா நாட்டு தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார். தேர்தலுக்குப் பின்னர் அவர் காணாமல் போய்விடுவார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது ஜெலன்ஸ்கியுடனான டிரம்பின் உரையாடலில் இடம்பெற்று இன்னொரு அதிர்வலையை எலான் மஸ்க் ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து உக்ரைன் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஜெலன்ஸ்கி - டிரம்ப் தொலைபேசி உரையாடலின்போது எலான் மஸ்க்கும் பேசியது உண்மை. டிரம்ப் பேசி விட்டு தொலைபேசியை மஸ்க்கிடம் கொடுத்தார். உக்ரைனுக்கு ஸ்டார்லிங் சேவைகளை வழங்கியமைக்காக ஜெலன்ஸ்கி அவருக்கு நன்றி தெரிவித்தார்.
ஆனால் முக்கியமான பேச்சுவார்த்தை டிரம்ப்புடன் தான் நடந்தது. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையின்போது போர் தொடர்பான விவகாரங்கள் ஏதும் விவாதிக்கப்படவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலேயே இந்த பேச்சுவார்த்தை இருந்தது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |