முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்பை கொல்ல சதி: ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      உலகம்
Trump 2024-07-14

Source: provided

வாஷிங்டன் : டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து, 2-வது முறையாக அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் தேர்வாகி உள்ளார். 

பிரச்சார களத்தில் கடும் நெருக்கடியை சந்தித்த தருணத்தில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. டிரம்ப் மேடையில் பேசிக் கொண்டு இருந்த போது திடீரென வந்த துப்பாக்கி குண்டு அவரது காதின்  மேல்பகுதியை உரசிச் சென்றது. 

அதன் பின்னர் புளோரிடா மாகாணத்தில் கோல்ப் மைதான கிளப்பில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த போது, மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். அப்போதும் டிரம்ப் உயிர் தப்பினார்.  

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

இது குறித்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த நபர் கைது செய்யப்படவில்லை. 

அவர் இன்னும் ஈரானில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஈரானுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அமெரிக்க மக்களையும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்த முயற்சி நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து