முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் நீர்வழி விமான சேவை: சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      இந்தியா
Andhra 2024-11-09

Source: provided

திருமலை : ஆந்திராவில் முதல் முறையாக பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை நீர்வழி விமான சேவையை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். 

 ஆந்திர மாநில அரசு முதல் முறையாக விஜயவாடாவில் கிருஷ்ணா நதி மத்தியில் அமைந்துள்ள பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை நீர்வழி விமான சேவையை சோதனை முறையில் தொடங்கியுள்ளது. 

இதனை நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.  தொடர்ந்து, விஜயவாடா பிரகாசம் அணையில் இருந்து இருவரும் நீர்வழி விமானத்தில் ஏறி ஸ்ரீசைலம் சென்று மீண்டும் அதே விமானத்தில் விஜயவாடா வந்து சேர்ந்தனர். 

ஒரே விமானத்தில் நீரிலும், ஆகாயத்திலும் பறக்கும் புது அனுபவத்தை வழங்கும் விதமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த விமான சேவையை சோதனை முறையில் இயக்கப்பட உள்ளது. இதற்காக நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி விஜயவாடா கிருஷ்ணா நதி கரையில் இருந்து நேற்று முன்தினம் அதிகாரிகளால் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் பயணம் செய்யும் இந்த நீர்வழி விமான சேவையில் ஸ்ரீசைலம் செல்வதை 1000 பார்வையாளர்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஜயவாடா நகர காவல் ஆணையர் ராஜசேகர பாபு தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து