முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூலதன செலவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது: முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
CM-3 2024-11-10

Source: provided

விருதுநகர் : மக்கள் நலனுக்காக நாம் செய்து வரும் மூலதன செலவுகள் குறித்து  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக் கூடாது என்று விருதுநகரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக தெரிவித்தார். 

விருதுநகரில்   6 தளங்களுடன் கூடிய புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து  நடந்த அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பேசியதாவது,

வீட்டு விளக்காக இருப்பேன். நாட்டிற்கு தொண்டனாக இருப்பேன். மக்கள் கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன். சில நாட்களுக்கு முன், இந்தியாவின் புகழ்பெற்ற இண்டியா டுடே பத்திரிகையில் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பெருமையும், புகழையும் வழங்கியது தமிழக மக்கள் தான். நமக்கு பின்னாடி, நம்மளை முந்தி வெற்றி பெற வேண்டும் என பல பேர் வந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் வேகமாக ஓட வேண்டும் என நான் நினைக்கிறேன். 

மாவட்டம் தோறும் கள ஆய்வுகளை நடத்தி கொண்டு இருக்கிறேன். இது குறித்து எதுவும் புரியாத, ஆட்சி பொறுப்பில் இருந்த போது, மக்களின் நினைத்து கவலைப்படாத, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சொல்கிறார், மக்கள் நலத்திட்டங்களுக்கு மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் கருணாநிதி பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை நான் ஒதுக்கி இருப்பதாக உளறி இருக்கிறார். அதை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது.

ஒருத்தர் பொய் சொல்லலாம், ஆனால் ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக் கூடாது என வேடிக்கையாக சொல்வார்கள். அதனை இனிமேல் கொஞ்சம் மாற்றி, பொய் சொல்லலாம். ஆனால் பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக் கூடாது. அந்த அளவுக்கு, பழனிசாமி புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார். 

மக்கள் நலனுக்காக நாம் செய்து வரும் மூலதன செலவுகள் என்னென்ன? எளிய மக்களுக்கு செய்த திட்டங்கள் என்னென்ன ? என்பது குறித்து இதே மேடையில் மணி கணக்கில் என்னால் சொல்ல முடியும். நான் கேட்கிறேன். 

நீங்கள் எதனை மக்களுக்கு பயன்படும் திட்டங்கள் என்று சொல்கிறீர்கள். தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு மைதானம் உள்ளிட்ட பல திட்டங்களை வேண்டாம் என்று சொல்கிறீர்களா? இப்படி வாய் துடுக்காகவும், ஆணவத்துடனும் பேசி, பேசி தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து கொண்டு இருக்கிறீர்கள். 

நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்திற்காகவே தமிழக மக்கள் இனிமேல் உங்களை தோற்கடித்து கொண்டுதான் இருப்பார்கள். அது உறுதி. நான் கேட்கிறேன் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழகத்தை காக்க ஓய்வின்றி உழைத்தார். கருணாநிதி பெயரை மக்கள் திட்டங்களுக்கு வைக்காமல் யாருடைய பெயரை வைப்பது.

பதவி சுகத்திற்காக, கரப்பான் பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து போனீர்களே, உங்க பெயரை வைக்க முடியுமா? என்ன பேசுகிறீர்கள். கருணாநிதி என்பது தமிழர்களின் மனதில் பொறிக்கப்பட்ட பெயர். தமிழகத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம். 

கருணாநிதி தான் தமிழகத்தினை காக்க கூடிய காவலரன். அவரது கொள்கைகள், சிந்தனைகளை செயல்படுத்தி வருகிறேன். என்னை பொறுத்த வரையில் என்றும், எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக, வாழ்கைக்கும் வளர்ச்சிக்கும் சேவகனாக என்னுடைய பணிகள் தொடரும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து