முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஃபெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் ரூ.2000 நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோக பணி தொடங்கியது அடுத்த 3 நாட்களில் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      தமிழகம்
Puyal 2024-07-09

Source: provided

கடலூர்: வெள்ளம் பாதித்த பகுதிகளில்  முழு வீச்சில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  வெள்ள நிவாரணம் ரூ. 2,000 வழங்குவதற்கான டோக்கன்  விநியோகம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.

கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதித்த ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  அது போல் வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழந்திருந்தால் தலா ரூ 4 ஆயிரமும், கோழி இறந்திருந்தால் தலா ரூ 100 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். மேலும் எருது, பசு இறந்திருந்தால் ரூ.37,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  வெள்ளம் பாதித்த பகுதிகளில்  முழு வீச்சில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  வெள்ள நிவாரணம் ரூ.2,000 வழங்குவதற்கான டோக்கன்  விநியோகம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 

இது குறித்து  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் கூறியதாவது,  விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேசன்கார்டுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான கணக்கீட்டு பணிகளை மாவட்ட கலெக்டர்கள்  தயாரித்துள்ளனர். இன்று (நேற்று) முதல் வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. டோக்கன் விநியோகிக்கப்பட்டு இரண்டு முதல் மூன்று நாட்களில் அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து