முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகமது ஷமியை உன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம் : அணிக்கு திரும்புவது குறித்து ரோகித் சர்மா விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      விளையாட்டு
Rogit-Sarma 2024-07-03

Source: provided

அடிலெய்டு : முகமது ஷமி இந்திய அணிக்கு எப்பொழுது திரும்புவார் என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார். மேலும் அவரை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணம்... 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் கடந்த 3 தினங்களுக்கு முன் தொடங்கியது.

வெற்றி இலக்காக... 

இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 180 ரன்களும், ஆஸ்திரேலியா 337 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 157 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது.இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (140 ரன்கள்) மற்றும் பந்துவீச்சில் (8 விக்கெட்டுகள்) ஸ்டார்க் முக்கிய பங்கு வகித்தனர்.

அழுத்தம் கொடுக்க... 

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் அவரால் இடம் பெற முடியவில்லை.முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு குறையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய அணிக்கு முகமது ஷமி எப்போது திரும்புவார் என்ற கேள்விக்கு ரோகித் சர்மா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, முகமது ஷமி இங்கு வந்து விளையாடுவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஷமியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நாங்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. என தெரிவித்தார்.

எனக்குத் தெரியாது...

மேலும் ஹெட் - முகமது சிராஜ் மோதல் குறித்து அவர் தெரிவிக்கையில், "அந்த நேரத்தில் நான் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்தேன். அதனால் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஹெட் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய திட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் அவருடைய விக்கெட்டை எடுத்த சிராஜ் அப்படி கொண்டாடினார்.  அதனால் இருவரும் சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்கள். அது எனக்கு தெரியாது. அதே சமயம் அந்த ஒரு தருணத்தை மட்டும் பார்க்காமல் மொத்த போட்டியையும் பார்ப்பதே என்னுடைய வேலை. இந்தியா - ஆஸ்திரேலியா போன்ற தரமான 2 அணிகள் விளையாடும்போது இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம். போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களை நாங்கள் கோட்டை தாண்டி கொண்டு வர விரும்பவில்லை.

மோசமான விஷயமல்ல...

அதே சமயம் இவ்வாறு எதிரணியுடன் சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்வது மோசமான விஷயமல்ல. சிராஜ் மட்டுமின்றி கடந்த காலங்களில் இது போல் நிறைய கிரிகெட்டர்கள் இப்படி ஈடுபட்டுள்ளார்கள். அங்கே ஆக்ரோஷத்திற்கும் அதிக ஆக்ரோஷத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்க வேண்டும் என்று நான் சொல்வேன். கேப்டனாக நாங்கள் கோட்டை தாண்டாமல் இருப்பதைப் பார்த்துக் கொள்வது என்னுடைய வேலை. ஆனால் இது போன்ற சில வார்த்தைகள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. எங்கள் வீரர்கள் இது போன்ற பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு முன் விளையாடியுள்ளார்கள். எனவே இது போன்ற விஷயங்கள் தங்களுடைய ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள அவர்களுக்கு தெரியும்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து