முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோகோவிச் முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      விளையாட்டு
jokovic 2023 06 12

Source: provided

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் - செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தாமஸ் மச்சாக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொள்ள உள்ளார்.

___________________________________________________________________________________________

அயர்லாந்து அணிக்கு அபராதம் 

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று அயர்லாந்தை ஒயிட்வாஷ் ஆக்கியது. இந்த தொடரின் 3-வது போட்டி கடந்த 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அயர்லாந்து அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 10 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

___________________________________________________________________________________________

ஒலிம்பிக்கில் செஸ்: குகேஷ் 

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனாக வலம் வந்த சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதனையடுத்து, அவருக்கு பிரதமர் முதல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஒலிம்பிக்கில் செஸ் போட்டி இடம்பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன். 

அதிலும் குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் பட்சத்தில், அதில் செஸ் இடம்பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன். செஸ் போட்டிக்கான வரவேற்பு மற்றும் ஆதரவு அதிகரித்துள்ளதாக நினைக்கிறேன். அதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒலிம்பிக்கில் செஸ் இடம்பெற்றால், அதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். ஒலிம்பிக்கில் செஸ் இடம்பெறுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.

___________________________________________________________________________________________

பிப். 14-ல் மகளிர் பிரீமியர் லீக் 

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் முறையாக போட்டிகள் நான்கு நகரங்களில் நடத்தப்படவுள்ளது. போட்டிகள் பரோடா, பெங்களூரு, மும்பை மற்றும் லக்னௌ ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்படவுள்ளன. முதல் போட்டி பரோடாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பரோடா மற்றும் லக்னௌ இரண்டு நகரங்களிலும் முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. கடந்த ஆண்டு போட்டிகள் அனைத்தும் பெங்களூரு மற்றும் புது தில்லியில் நடைபெற்றன. இந்த ஆண்டு இறுதிப்போட்டி மும்பையில் வருகிற மார்ச் 15 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________________________________________

பயிற்சியில் ரோகித் சர்மா 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில்  இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபடும் விடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த விடியோவில் ரோஹித் சர்மா பல்வேறு விதமான ஷாட்டுகளையும் விளையாடி பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்க முடிகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, மும்பை அணியுடன் இணைந்து அண்மையில் பயிற்சி மேற்கொண்டார். இதனால், அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளார் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக ஜனவரி 23 ஆம் தேதி மும்பை அணி விளையாடும் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

___________________________________________________________________________________________

இந்திய அணியில்... கருண் விருப்பம்

3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய கருண் நாயர், விஜய் ஹசாரே டிராபியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்து வருகிறார். இதுவரை அவர் 5 சதங்களை விளாசியுள்ளார். விதர்பா அணிக்காக நடப்பு விஜய் ஹசாரே தொடரில் 756 ரன்களை 756 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் நம்ப முடியாத அளவுக்கு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர், இந்திய அணிக்காக விளையாடும் எண்ணம் இன்னும் தனக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: அன்பான கிரிக்கெட்டே, எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எப்போதும் எனக்குள் இருக்கிறது. ஆமாம், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இன்னும் எனக்குள் இருந்துகொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே இந்த தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஒரே இலக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து