முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2025      ஆன்மிகம்
Chathuragiri 2023 07-17

Source: provided

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர், சிக்கந்தர் தர்காவிற்கு பக்தர்கள் செல்ல அனுதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையை பாதுகாப்போம் என்று இந்து அமைப்பினர் ஒன்று கூடி நேற்று போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி கடந்த 2 தினங்களாக மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இதன்படி திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சூழலில் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை அனுமதி வழங்கியது.

அதைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானவர்கள், மதுரை பழங்காநத்தம் பகுதியில் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். இதனை தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில செயலாளர் சேவுகன், புதுச்சேரி மாநில தலைவர் குமார், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் வன்னியராஜன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் 2 நாட்கள் 144 தடை உத்தரவுக்கு பின்னர் திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. சுப்ரமணிய சுவாமி கோவிலில் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர், சிக்கந்தர் தர்காவிற்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் அனுமதி இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் நேற்றுமுன்தினம் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா, இந்து முன்னணியைச் சேர்ந்த 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து