முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த டிராகன் விண்கலம்

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2025      உலகம்
Dragon-Spaceship 2025-03-16

Source: provided

வாஸிங்டன் : சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்டுள்ள டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. இந்த விண்கலம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) காலை 10 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆன் மெக்ளெய்ன் மற்றும் நிகோல் ஏயெர்ஸ், ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸாவை சேர்ந்த விஞ்ஞானி டகூயா அனிஷி, ரஷிய நிறுவனமான ரோஸ்கோமோஸை சேர்ந்த விஞ்ஞானி கிரில் பெஸ்கோவ் ஆகிய நால்வரும் டிராகன் விண்கலத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறங்கினர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற அவர்களை, அங்கு கடந்த 9 மாதங்களாக தங்கியிருந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோருடன் சேர்ந்து பிற விஞ்ஞானிகளும் கைதட்டி வரவேற்றனர். இந்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, சுனிதா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷிய வின்வெளி வீரர்கள் இருவருடன் சேர்ந்து மார்ச் 19-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளாலோ அல்லது பிற காரணங்களாலோ கால தாமதம் ஏற்படவும் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து