முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.களுக்கு ஊதியம் உயர்வு

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்வு குறித்த அறிவிக்கை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இது வருமான வரிச் சட்டம், 1961, கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி செலவு பணவீக்கக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு மாற்றியமைக்ப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்டிருக்கும் இந்த அறிவிக்கையில் புதிதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கும் ஊதிய விவரங்கள் வருமாறு., பாராளுமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1,24,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.எம்.பி.க்களின் தினசரி படி ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரூ.25,000-லிருந்து ரூ.31,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000-லிருந்து ரூ.2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து