முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன்

வெள்ளிக்கிழமை, 6 ஜூன் 2025      தமிழகம்
CM-2 2025-06-06

Source: provided

சென்னை : மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ, தி.மு.க.வைச் சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அதற்கான தேர்தல், வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.

இதில், அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. சார்பாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒரு மாநிலங்களவை சீட் 

ஒதுக்கி உள்ளது. அதில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதனிடையே, கமல்ஹாசன் உள்பட மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது மக்கள் நீதி மையம் பொதுச்செயலாளர் அருணாச்சலம், துணைத்தலைவர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து