Idhayam Matrimony

இந்தியாவில் ரபேல் விமான பாகங்கள் தயாரிக்க டசால்ட்டுடன் டாடா ஒப்பந்தம்

வெள்ளிக்கிழமை, 6 ஜூன் 2025      இந்தியா
Rafale 2024-05-29

Source: provided

புதுடெல்லி : ரபேல் விமானத்தின் கூண்டு பகுதியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக டசால்ட்டுடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.

இந்த விமானங்கள் இதுவரை பிரான்ஸ் நாட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே அதனை தயாரிப்பதற்கான உரிமத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது. இதன்படி இந்தியாவில் அது தயாரிக்கப்பட உள்ளது. முழு விமானமும் இந்தியாவில் தயாரிக்கப்படாது. விமானத்தின் உடல்பாகம் மட்டும் இங்கே தயாரிக்கப்படும்.

இதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. உற்பத்தி பரிமாற்றம் தொடர்பான 4 ஒப்பந்தங்களில் அவை கையெழுத்திட்டுள்ளன. அதாவது விமானத்தின் கூம்பு வடிவ முன்பகுதி, மையப்பகுதி, பின்புற பகுதி மற்றும் பின்புற பக்கவாட்டு பகுதி ஆகியவற்றுக்காக 4 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. மொத்தத்தில் விமானத்தின் கூண்டு பகுதி இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் விமான உடல் பாகங்களின் முதல் பகுதி 2028-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாதம் 2 உடல்பகுதிகள் உற்பத்தி செய்யப்படும் என  கூறப்படுகிறது. ரபேல் விமானங்கள் பிரான்சுக்கு வெளியே இந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்பட இருப்பது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்திருக்கிறது. இந்திய அரசின் 'மேன் இன் இந்தியா' மற்றும் ஆத்ம நிர்பார் முயற்சிகளுக்கு டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் உறுதுணை புரிந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து