முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏறுமுகத்தில் தங்கம் விலை

புதன்கிழமை, 4 ஜூன் 2025      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே உயர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அமெரிக்கா - சீனா இடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை மே 12-ம் தேதி ரூ. 2,360 வரை குறைந்து, ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. மே 28-ம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 4) கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,720-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து