முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழடி உள்ளிட்ட அகழாய்வு இடங்களுக்கு கல்விச் சுற்றுலா : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      தமிழகம்
Anbil-Mahesh 2024-10-14

Source: provided

சென்னை : கீழடி மற்றும் பிற அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக ‘கலைச் சிற்பி’ எனும் பயிலரங்கம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஓவியம், சிற்பம், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாடகம், பொம்மலாட்டம் போன்ற கலைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்தர மோகன், இயக்குநர்கள் ச.கண்ணப்பன், பூ.ஆ. நரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:  கலைச் சிற்பி’ திட்டம் மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும். கிராமப் புற மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு களப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது.  இது தவிர ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்கள் குறித்து கற்பிக்கின்றனர். இனிமேல் பள்ளி மாணவர்களையும் கீழடி மற்றும் பிற அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வோம். இத்திட்டம் மாணவர்களுக்கு வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து