முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிர் நிவாரண நிதியில் ரூ. 40 கோடி மோசடி: 11 அதிகாரிகள் சஸ்பெண்ட்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      இந்தியா
Farmer 2024-11-25

Source: provided

மும்பை : பருவ மழையின் போது  சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணத்தில் ரூ. 40 கோடி மோசடி செய்ததாக  11 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் பருவ மழையின் போது விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டது.  அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், அம்மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பயிர் நிவாரணத்தில் மோசடி நடைபெறுவதாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகார் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை குழுவை கலெக்டர் அமைத்தார். அந்த குழு நடத்திய விசாரணையில் விவசாயிகளுக்கு வழக்கவேண்டிய பயிர்களுக்கான நிவாரணத்தில் 40 கோடி ரூபாய் மோசடி நடத்திருப்பது தெரியவந்தது. இந்த மோசடியில் வருவாய்த்துறை அதிகாரிகள் 11 பேர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மோசடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகங்களில் ஏற்கனவே சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து