முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மா’ விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      தமிழகம்
Stalin 2024-12-04

Source: provided

சென்னை : மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி.யை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ‘மா’ விவசாயிகளுக்கு 50:50 பகிர்வு முறையில் மாநில அரசும் மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் பி.எஸ். ஆஸா சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும், மாம்பழங்களை உரிய விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் பிரதமர் மோடி மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும். மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிட வேண்டும்.

மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி.யை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசும் மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் பி.எம். ஆசா சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து