முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா அச்சுறுத்தல் எதிரொலி: சொந்த மண்ணில் ஜப்பான் முதல் ஏவுகணை சோதனை

புதன்கிழமை, 25 ஜூன் 2025      உலகம்
Indian-Navy 2025-04-27

Source: provided

ஜப்பான் : ஜப்பான் தனது முதல் ஏவுகணை சோதனையை அதன் மண்ணில் நடத்தியுள்ளதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனை நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் நடத்தப்பட்டது. டைப்-88 குறுகிய தூர தரையிலிருந்து கப்பல் வரையிலான ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சீனாவில் போர் கப்பல் ஜப்பான் அருகில் உள்ள கடற்பரப்பில் காணப்பட்டதாக ஜப்பன் கவலை தெரிவித்திருந்தது. எனவே அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரித்து வருகிறது. 

புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இருந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஜப்பான் இதற்கு முன்பு அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கள் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. தங்கள் சொந்த மண்ணில் ஜப்பான் ஏவுகணை சோதனை நடத்துவது இதுவே முதல் முறை ஆகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து