முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுங்கச்சாவடியில் வீண் தாமதத்தை தடுக்க வேறு ஏதும் வழியில்லையா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

புதன்கிழமை, 25 ஜூன் 2025      தமிழகம்
Mdu-High-Court 2023-04-06

மதுரை, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் அரை மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று ஆதங்கம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, சுங்கச்சாவடியில் வீண் தாமதத்தை தடுக்க வேறு ஏதும் வழியில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் எல்லா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை, "தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான். ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது. சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?" எனக் கேள்வி எழுப்பியது. அத்துடன் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து