முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1-ம் வகுப்பு முதல் இந்தி மொழி: மகாராஷ்டிரா துணை முதல்வர் எதிர்ப்பு

புதன்கிழமை, 25 ஜூன் 2025      இந்தியா
Ajithh-Bavar 2024-12-07

Source: provided

மும்பை : மகாராஷ்டிராவில் 1-ம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக்கொள்ளப்படும் என மும்மொழிக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் எதிர்ப்ப தெரிவித்துள்ளார்.

இருமொழி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை திட்டத்தை ஏற்க மறுத்து வருகின்றன. இதன்மூலம் மறைமுகமாக இந்தியை திணிக்க முயற்சிப்பதாக, மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்நாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பட்நாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளது.

மராத்தி மற்றும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிக் கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் இந்தி கற்றுக்கொடுக்கப்படும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 1-ம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக்கொள்ளப்படும் என மும்மொழிக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் எதிர்ப்ப தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஜித் பவார் கூறியதாவது:- இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருந்தார். 1 முதல் 4-ம் வகுப்பு வரை இந்தி கற்றுப்பிக்கக் கூடாது. 5-ம் வகுப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும். மாணவர்கள் 1-ம் வகுப்பில் இருந்து மராத்தி கற்க வேண்டும். சரளமாக படிக்கும், எழுதும் திறனை பெற வேண்டும். இவ்வாறு அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து