எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழ்ச் சமூகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியைப் போன்ற படைப்பாளிகள் உருவாக வேண்டும் என்று சாகித்ய அகாடமி மற்றும் ஜே.என்.யு. பல்கலை. தமிழ்த்துறை இணைந்து நடத்திய கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் படைப்பாளிகளை, அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். எழுத்தாளரைப் போற்றும் சமூகம்தான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 27) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், சாகித்ய அகாடமி மற்றும் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் கருணாநிதி நூற்றாண்டுக் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இலக்கியத்தின் வழி இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் மகத்தான பணியினை சாகித்ய அகாடமி செய்து வருகிறது.
ஒருவரின் இலக்கியத் தகுதி என்பதற்கு சாகித்ய அகாடமிதான் அளவுகோல் எனும் அளவுக்கு புகழோடு செயல்பட்டு வருகிறது. எழுத்தாளர்களையும், மொழிபெயர்ப்பாளர்களையும் ஊக்குவிக்கும் சாகித்ய அகாடமியின் பணி மகத்தானது. போற்றுதலுக்குரியது. அவர்கள் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜே.என்.யு. உடன் இணைந்து இங்கு கொண்டாடுவது சிறப்புக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது.
இந்தியாவில் எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் ஜே.என்.யு.க்கு என்று, தனி குணம் உண்டு. கருத்தாழமிக்க உரையாடல்களுக்கு இடமாக உள்ள ஜே.என்.யு.வில் வெளிவரும் ஆய்வுகள், உலக அளவில் பேசப்படுகிறது. அதனால்தான் உலக அளவிலான பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஜே.என்.யு.வோடு இணைந்து பணியாற்ற விரும்புகின்றன. அதனால்தான், மறைந்த முதல்வர் கருணாநிதி ஜே.என்.யு. -வில் தமிழுக்கு ஒரு தனி இருக்கை இருக்க வேண்டும் என்று விரும்பி, அதைச் செயல்படுத்திக் காட்டினார்.
15 ஆண்டுகள் கழித்து, இன்றைக்கு அந்த இருக்கையை தனி ஒரு துறையாக வளர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த வகையில் ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறையை உருவாக்க 5 கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்கினோம். ஜே.என்.யு.வோடு பன்னோக்கு கலையரங்கத்துக்கு அருகே உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் சிலையை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாகித்ய அகாடமியும், ஜே.என்.யு.வும் இணைந்து நடத்தும் இந்த விழா மூலமாக மறைந்த முதல்வர் கருணாநிதி இந்திய இலக்கிய முகமாக அங்கீகரிக்கப்படும் நாளாக இது அமைந்திருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெறும் படைப்பாளர்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்து மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று, ‘கனவு இல்லம்’என்று ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினேன்.
இந்த திட்டத்தில் இதுவரைக்கும் 15 அறிஞர்களுக்கு தமிழக அரசு கனவு இல்லம் வழங்கி இருக்கிறது. பரிசுத்தொகை ஒரு லட்சம் என்றால், வீட்டின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்.அதுவும், அந்த வீட்டுக்கான பத்திரச் செலவு முதலானவற்றையும் தமிழக அரசே ஏற்கிறது. கனவு இல்லம் திட்டத்தின் நீட்சியாக சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றவர்களுக்கும் கனவு இல்லம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இதுவரை 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு கனவு இல்லம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட திட்டம் இல்லை என்று சொல்லத்தக்க வகையில் இதனை நாம் செயல்படுத்தி இருக்கிறோம். இதற்கெல்லாம் ஒரே நோக்கம், படைப்பாளிகளை, அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதே தி.மு.க. அரசின் நோக்கம். எழுத்தாளரைப் போற்றும் சமூகம்தான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும். இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக மக்களின் உயர்வுக்காக அவர்களின் சமூக விடுதலைக்காக முற்போக்குச் சிந்தனைக்காக இயங்கிய, இயங்கும் எழுத்தாளர்களை தமிழ்ச் சமூகம் உச்சி மோந்து கொண்டாட தவறியதே இல்லை. அந்த வழியில்தான் மறைந்த முதல்வர் கருணாநிதியும் தமிழ் இலக்கியவாதியாக இருந்து, சிறப்பான படைப்புகளைக் கொடுத்தது மட்டுமல்லாமல் சிறப்பான படைப்பாளிகள் அனைவரையும் அங்கீகரித்தார், அரவணைத்தார். அதுதான் அவரது தனிச் சிறப்பு.
தமிழ்ச் சமூகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியைப் போன்ற படைப்பாளிகள் உருவாக வேண்டும். படைப்பாற்றல் பெற்றவர்கள் தொடர்ந்து தங்களின் படைப்பை எழுதி வழங்க வேண்டும். சிறந்த படைப்புகளை இதுபோன்ற அமைப்புகள் பாராட்ட வேண்டும். படைப்பாளிகள் அவர்கள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும். இதைத்தான் தமிழக அரசு செய்து வருகிறது. சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகளும் இந்தப் பணியை தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 10 hours ago |
-
இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., உடன் கூட்டணியா? - இல்லை என்கிறது வங்கதேசம்
27 Jun 2025டாக்கா : இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்கீஸ்தான் உடன் கூட்டணி இல்லை என்று வங்கதேசம் அரசு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-06-2025.
27 Jun 2025 -
2027-ம் ஆண்டுக்குள் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்படும்: ரஷ்யா உறுதி
27 Jun 2025புதுடில்லி : வரும் 2027ம் ஆண்டிற்குள், மீதமுள்ள இரண்டு எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
அணுசக்தி ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
27 Jun 2025டெஹ்ரான் : அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்
27 Jun 2025சென்னை : சிறுவன் கடத்தல் வழக்கில், பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
படிக்கட்டுகளில் சாகசம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
27 Jun 2025மதுரை : பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் ந
-
4 நாட்களுக்கு பிறகு குற்றால அருவியில் குளிக்க அனுமதி
27 Jun 2025தென்காசி : குற்றாலம் அருவியில் 4 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்துள்ளனர்.
-
வரும் 15-ம் தேதி முதல் காலை உணவு திட்டம் அரசு உதவிபெறும் அனைத்து பள்ளிகளிலும் அமலாகிறது
27 Jun 2025சென்னை, அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜூலை 15ம் தேதி முதல் தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
-
தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? - செல்வப்பெருந்தகை விளக்கம்
27 Jun 2025திண்டிவனம் : பா.ம.க. தி.மு.க. கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.
-
கர்நாடகாவில் 15 வகையான மருந்து, மாத்திரைகளுக்கு தடை
27 Jun 2025பெங்களூரு : கர்நாடகத்தில் 'பாராசிட்டமல்-650' உள்பட 15 வகையான மருந்து மாத்திரைகளுக்கு கர்நாடக அரசின் சுகாதாரத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
கோவில் தேர் திருவிழாவில் சாதிய அடையாளங்கள் கூடாது: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
27 Jun 2025மதுரை, நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்களும் பயன்படுத்தக் கூடாது என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அகமதாபாத் விமான விபத்து; ஐ.நா., விசாரணையை நிராகரித்தது இந்தியா
27 Jun 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது.
-
குறைந்த தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் தான் இருப்போம் : திருமாவளவன் திட்டவட்டம்
27 Jun 2025திருச்சி : குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய நிதி உதவி முடிவுகளில் முரண்பாடு: மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்
27 Jun 2025சென்னை : தேசிய பட்டியல் சாதியினருக்கான பெல்லோஷிப் முடிவுகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
கமேனியை கொல்ல திட்டம்: ஒப்புக்கொண்டது இஸ்ரேல்
27 Jun 2025டெல் அவிவ் : கமேனியே கொல்ல திட்டமிடப்பட்டதை இஸ்ரேல் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.
-
எழுத்தாளரை போற்றும் சமூகமே உயர்ந்த சமூகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Jun 2025சென்னை, தமிழ்ச் சமூகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியைப் போன்ற படைப்பாளிகள் உருவாக வேண்டும் என்று சாகித்ய அகாடமி மற்றும் ஜே.என்.யு. பல்கலை.
-
சீனாவுடனான பதற்றத்தை குறைக்க 4 திட்டங்களை எடுத்துரைத்த ராஜ்நாத்
27 Jun 2025பீஜிங் : சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் டாங் ஜூனை சந்தித்த நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையில் பதற்றத்தை குறைப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடைய
-
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவு சேதம் : நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச் தகவல்
27 Jun 2025இஸ்ரேல் : ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத 345 கட்சிகளை நீக்கும் நடவடிக்கை தொடக்கம்
27 Jun 2025புதுடெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
-
இமாச்சலபிரதேசம்: வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலி
27 Jun 2025டேராடூன் : இமாச்சலபிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 44 ஆயிரம் கனஅடியாக உயர்வு
27 Jun 2025சேலம் : கர்நாடகா அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணைக்கு 44 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
-
பூரி ரத யாத்திரை தொடங்கியது: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
27 Jun 2025பூரி : அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
4.8 ரிக்டர் அளவில் சீனாவில் நிலநடுக்கம்
27 Jun 2025பீஜிங் : சீனாவில் ரிக்டர் 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
27 Jun 2025சென்னை, பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகள் 2019க்குப் பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ள நிலையில் தமிழ்நாட்டி
-
பா.ஜ.க. கூட்டணியில் விஜய் இணைவாரா? - காத்திருங்கள் என அமித்ஷா பதில்
27 Jun 2025புதுடெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்ற கேள்விக்கு காத்திருங்கள் என அமித்ஷா பதிலளித்தார்.