முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜினாமா ஏற்பு : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      இந்தியா
Rangasamy 2023 07-16

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் ஜெ சரவணன் குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை முதல்வர் ரங்கசாமி  ஏற்றுக்கொண்டார்.

புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்யாக இருந்து வந்தவர் சாய் ஜெ சரவணன் குமார். இவர் ஊசுடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான இவருக்கு புதுவை சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதிவியை சாய் ஜெ சரவணன் குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து, அவர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டதன் பேரில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.  இது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்.ஆர். காங்கிரஸ் உடன் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடைபெறும் நிலையில் அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களுடன் பேசிய அவர்,  அமைச்சர் சாய் சரவணன் குமார் கொடுத்த ராஜிநாமா கடிதம் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டதாகவும், இந்தக் கடிதம் ஏற்கப்பட்டதாகவும், அமைச்சரின் ராஜிநாமாவும் ஏற்கப்பட்டதாகவும்  தெரிவித்தார். அடுத்த அமைச்சர் யார் என்பது இதுவரை முடிவாகவில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து