முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக்மேட் செய்யமுடியாத எதிர்காலம்: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2025      தமிழகம்
Praggnanandha 2025-06-29

Source: provided

சென்னை : உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 2025-ல், தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது: உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 2025-ல் வென்றதற்கும் அதன்மூலம் கிளாசிக்கல் வீரர் தரவரிசையில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்ததுக்கும், லைவ் ரேட்டிங் மதிப்பீட்டில் உலகில் 4-வது வீரராக உயர்ந்ததுக்கும் பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிப் பாதையில் தொடரும் வகையரான அவரது கரங்களில் செக்மேட் செய்யமுடியாத எதிர்காலம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 2025-ஐ வென்றதன் மூலம் ,  பிரக்ஞானந்தா, மீண்டும் ஒருமுறை செஸ் உலகில் பெரும் அலையை ஏற்படுத்தியிருக்கிறார்.  பிரக்ஞானந்தாவின் சாதனைகள் பெருமையளிக்கிறது. அவரது வெற்றிகள் மென்மேலும் தொடரட்டும் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து