முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுகள் நிறைவு: சென்னை மெட்ரோவில் இதுவரை 39 கோடி பேர் பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2025      தமிழகம்
Metro 2024-05-31

Source: provided

சென்னை : சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை 39 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.     

சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு மெட்ரோ ரெயில் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரெயிலில் பயணிக்கின்றனர். இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் தொடங்கி நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2015 ஜுன் 29ம் தேதி கோயம்பேடு, ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகளில் மொத்தம் 39 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

முதற்கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால் தற்போது 2ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து