முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க பயணம்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      விளையாட்டு
Nedanyagu 2024-12-10

Source: provided

டெல்அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் தொடங்கிய போரானது, கடந்த ஜூன் 24 ஆம் தேதியன்று 12-ம் நாளை எட்டியதுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவித்தார். அதனை ஏற்ற இருநாடுகளும், தங்களது தாக்குதல்களை நிறுத்தியதுடன். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், பிரதமர் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், கடந்த ஜனவரியில் அதிபர் டிரம்ப்பின் ஆட்சி அமைந்தது முதல், 3-வது முறையாக பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் நடைபெற்று வரும் போரை நிறுத்துமாறு, அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். இதனால், பிரதமர் நெதன்யாகுவின் இந்தப் பயணத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து