முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      இந்தியா
John-Kumar 2025-07-13

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.   

புதுச்சேரி பா.ஜ.க.வில் கோஷ்டிபூசல் நிலவியது. 6 எம்.எல்.ஏ.க்களில் இருவருக்கு அமைச்சர் பதவியும், சட்டப்பேரவைத் தலைவர் பதவியும் தரப்பட்டது. எஞ்சிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் பதவி கோரி வந்தனர். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்கு பிறகு வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. அதிரடி முடிவு எடுத்தது. புதுவையில் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த பா.ஜ.க. அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், அக்கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர்   கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் தங்கள் தங்கள் பதவிகளைத் துறந்தனர்.

அதைத்தொடர்ந்து பா.ஜ.க. மாநிலத்தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகி பதவியேற்றார். பா.ஜ.க. மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், ஜிஎன்எஸ் ராஜசேகரன் ஆகியோர் நியமன எம்.எல்.ஏ. பதவிக்கும், ஜான்குமார் அமைச்சர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டனர். துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.  இரண்டு வாரங்களுக்கு பிறகு அனுமதி கிடைத்ததையடுத்து  இன்று பதவியேற்பு விழா நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைத்தலைவர் செல்வம், மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அமைச்சராக பா.ஜ.க. ஜான்குமார் ராஜ்நிவாஸில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்கிறது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிலையில் அமைச்சர் ஜான்குமார் தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இன்று மதியம் ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி அன்னதானம் வழங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து