Idhayam Matrimony

இந்தியா வந்து சேர்ந்தது நவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்..!

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      இந்தியா
Appshi 2025-07-22

Source: provided

புதுடில்லி : அமெரிக்காவின் அதி நவீன போர் ரக அப்பாச்சி ஹெலிகாப்டர் நேற்று இந்தியா வந்து சேர்ந்தது. 

உபி., மாநிலம் ஹிண்டன் விமானபடை தளத்தில் வந்து இறங்கியது. இன்னும் 2 நாட்களில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். ஒரு நிமிடத்தில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று 128 இலக்குகளை தாக்கும்.

அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்ட அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்கா தயாரித்து வருகிறது. 2015ம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவுடனான ரூ.13,952 கோடி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய விமானப்படையில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும், ராணுவத்தில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.

உலகின் அதிநவீன போர் ஹெலிகாப்டர்களில் சக்தி வாய்ந்தது AH-64E என்னும் அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர். இதை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரிக்கிறது. கூடுதலாக மேலும் 6 ஹெலிகாப்டர்களை வாங்க, கடந்த 2020ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.5,171 கோடியில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், முதற்கட்டமாக, 3 அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர்கள் நேற்று  ஜூலை 22ம் தேதி வந்து சேர்ந்தது. அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், எகிப்து ஆகிய நாடுகள் இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பயன்படுத்த வருகிறது. தற்போது இந்தியாவும் தனது வலிமையை பெருக்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து