Idhayam Matrimony

தற்போது நலமுடன் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துணை முதல்வர் உதயநிதி தகவல்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை முதல்வர் தொடர்ந்து மேற்கொள்வார்' என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து பரிசோதனை முடிந்த நிலையில், தேனாம்பேட்டை அப்பல்லோவில் இருந்து மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்வர் திரும்பினார். அப்போது அவர் காரின் முன்பகுதி இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அதன்பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். நேற்று காலை முதல்வருக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து மருத்துவர்கள் அறிக்கை அளிப்பார்கள். 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து