Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      தமிழகம்      அரசியல்
Anwar-Raja-1

சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான அன்வர் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழ்​நாட்​டில் காலூன்ற துடிப்​பது பாஜக-​வின் எண்​ணம். அது ஒருக்காலும் நடக்​காது என்​பது என்​னுடைய தனிப்​பட்ட கருத்​து என்று அன்வர் ராஜா கூறியிருந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. விரைவில் அன்வர் ராஜா அ.தி.மு.க.விலிருந்து விலகுவார் என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று தி.மு.க.வில் இணைவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்துள்ளார் அன்வர் ராஜா. இந்த செய்தி ஊடகங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே அன்வர் ராஜாவை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி நேற்று வரை அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் அ.தி.மு.க.வில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து