முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் திட்டவட்டம்

புதன்கிழமை, 23 ஜூலை 2025      தமிழகம்
Anbil-Mahesh 2024-12-04

சென்னை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுக்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வியை உரிமையாக வழங்குகிறது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சம், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பதாகும். அவர்களுக்கான கட்டணத்தை முதலில் மாநில அரசு செலவழிக்கும். பின்னர் மத்திய அரசு அதை வழங்குகிறது.

இந்தநிலையில் தமிழக அரசு, மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்காரணமாக தமிழகத்திற்கு தர வேண்டிய சுமார் ரூ.2,500 கோடி கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வில்லை. இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்த நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இருப்பினும் நிதி வழங்கவில்லை. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் மத்திய அரசிற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவர் கொடுத்த "மதயானை" எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!... நன்றி தலைவா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து