முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

புதன்கிழமை, 23 ஜூலை 2025      தமிழகம்
Ma Subramani

Source: provided

சென்னை : மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களுக்கு முன் காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால், அவர் அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ள சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும், அவருக்கு மேலும் பல பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கிரீம்ஸ் சாலை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சுமார் 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சகோதரர் மு.க.முத்து மறைவால் ஒருநாள் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாப்பிடாமல் இருந்துள்ளார். அதற்கு மறுநாள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை நடைபயணம் மேற்கொண்டபோது முதல்வருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை; அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அப்பலோ ஆஸ்பத்திரியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் எனும் தகவல் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து