முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் பரிசுத்தொகை..?

செவ்வாய்க்கிழமை, 9 செப்டம்பர் 2025      விளையாட்டு
USA-1 2025-09-09

Source: provided

ஆண்டின் கடைசி ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் சினெரை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடினார். சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு ரூ.44 கோடியும், 2-வது இடம் பிடித்த சினெருக்கு ரூ.22 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா அனிசிமோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார். மகுடம் சூடிய அரினா சபலென்கா ரூ.44 கோடியை பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த அனிசிமோவாவுக்கு ரூ.22 கோடி பரிசாக கிட்டியது.

_____________________________________________________________________________________

கம்மின்ஸ், ஸ்டார்க் புதிய திட்டம்

ஆஸ்திரெலிய அணியின் தூண்களாக ஸ்டார்க் (35), கம்மின்ஸ் (32), ஹேசில்வுட் (34) இருக்கிறார்கள். மூவருமே முப்பதைக் கடந்ததால் இன்னும் எத்தனை வருஷன் விளையாடுவார்கள் எனத் தெரியவில்லை. சமீபத்தில் ஸ்டார்க் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஹேசில்வுட் காயத்தால் அவதியுறுகிறார். பாட் கம்மின்ஸ் நியூசி., இந்தியாவுடனான வெள்ளைப் பந்து தொடரை காயம் காரணமாக புறக்கணித்துள்ளார்.

இந்நிலையில், ஹேசில்வுட் சென் ரேடியாவில் இது குறித்து பேசியதாவது: தற்போதைய நிலைமைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், தொடருக்கு பின்பு உட்கார்ந்து இது குறித்து சிந்திப்போம். நாங்கள் அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறோம். அடுத்த இரண்டாண்டுகளில் அதிகமான போட்டிகள் வரவிருக்கின்றன. ஆஷஸ் தொடர் மட்டுமல்லாமல் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டிகளும் இருப்பதால் எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் ஆர்வமாக இருக்கிறது. எங்களிடம் இன்னும் சில ஆண்டுகளுக்கான கிரிக்கெட் மிச்சம் இருக்கிறதென நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

_____________________________________________________________________________________

தெ.ஆப்பிரிக்கா அணிக்கு அபராதம்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்க 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த அனைவருக்கும் தலா 5 சதவீதம் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. 

_____________________________________________________________________________________

சஞ்சு சாம்சனின் தாராள மனசு

கேரளாவில் கேரள பிரீமியர் லீக் டி20 2025 தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் கொச்சி அணிக்காக 26.80 லட்சம் என்ற பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் வாங்கப்பட்டார். அந்த அணிக்காக ஓப்பனிங்கில் களமிறங்கி மிரட்டலாக விளையாடிய அவர் 5 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 368 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாக கொச்சி அணியிலிருந்து வெளியேறினார். மறுபுறம் சஞ்சு சாம்சன் தம்பி ஷாலி சாம்சன் தலைமையில் தொடர்ந்து அசத்திய கொச்சி அணி 2025 கேரளா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்நிலையில் கோப்பையை வென்ற தங்களுடைய கொச்சி அணிக்கு சாம்சன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்ற தம்முடைய தம்பிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் ஏலத்தில் தமக்கு கொடுக்கப்பட்ட சம்பளத் தொகையை கொச்சி அணியின் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு பரிசாக வழங்குவதாகவும் சாம்சன் அறிவித்துள்ளார். எனவே தம்முடைய மாநிலத்தில் நடைபெறும் தொடரின் சம்பளத்தை அவர் சக வீரர்களுக்கு சிறிய ஊக்கத்தொகைப் பரிசாக வழங்கியுள்ளார். அவருடைய இந்த செயலுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு வருகின்றனர். 

_____________________________________________________________________________________

இந்திய அணி குறித்து பாக்., கேப்டன் 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இரவு தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி ஆசியக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறதே என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த சல்மான் ஆகா, டி20 கிரிக்கெட்டில் எந்த அணியையும் ஃபேவரிட் என நான் நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும். இது ஒரு வேகமான விளையாட்டு. ஓரிரு மணி நேரம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து