முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17-வது ஆசிய கோப்பை அறிமுகம்: கேப்டன்கள் குழு புகைப்படம்

செவ்வாய்க்கிழமை, 9 செப்டம்பர் 2025      விளையாட்டு
Captains 2025-09-09

Source: provided

துபாய் : ஆசிய கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு கூட்டாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

சூப்பர் 4 சுற்றுக்கு...

17-வது ஆசிய கோப்பை போட்டி (டி20) நேற்று தொடங்கிய நிலையில் 28-ம் தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிப்போட்டிக்கு... 

இந்தச் சுற்றில் விளையாடும் 4 அணிகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மதகுதி பெறும். அபுதாபியில் நேற்று நடைபெற்ற  தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் அணிகள் மோதின.  சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை இன்று எதிர்கொள்கிறது.

கோப்பை அறிமுகம்...

இந்நிலையில், ஆசிய கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு கூட்டாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து