Idhayam Matrimony

மீண்டும் 80 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை

திங்கட்கிழமை, 8 செப்டம்பர் 2025      வர்த்தகம்
Gold 2025-02-20

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த நிலையில் மக்கள் அதிர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு கிராம் 90 உயர்ந்து ரூ.10,060-க்கும், ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.80,480-க்கு விற்பனையானது.

வாரத்தின் முதல் நாளான நேற்று காலை வர்த்தகம் தொடங்கும்போது தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760-க்கும் விற்பனையானது.

ஆனால், வர்த்தகம் நிறைவுபெற உள்ள நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் 90 உயர்ந்து ரூ.10,060-க்கும், ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.80,480-க்கு விற்கப்படுகிறது. நேற்று காலை குறைந்திருந்த தங்கம் விலை, திடீரென மீண்டும் உயர்ந்து விற்பனையானது.

தங்கத்தோடு போட்டிப்போட்டுக் கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்து வருகின்றது. நேற்று காலை ஒரு கிராம் ரூ.137-க்கு விற்பனையானது. பிற்பகலுக்கு மேல் ரூ. 3 உயர்ந்து ரூ.140-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,40,000-க்கும் விற்பனையானது.

இந்தியா-அமெரிக்கா இடையே வரி உயர்வு உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவதாகத் தங்க மதிப்பீட்டாளர்கள் கூறியுள்ளனர். இனிவரும் நாள்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவது, திருமண வயதில் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து