எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு, தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்கவேண்டும் என்றும், தாய்மொழிப் பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு கவர்னர் வகுப்பெடுக்க வேண்டாம் அந்த பாடத்தில் பி.எச்.டி. வாங்கியவர்கள் நாங்கள் என்றும் ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மத்திய பா.ஜ.க. தமிழ்நாட்டிற்கு கொடுக்கின்ற குடைச்சல் போதாது என்று தமிழ்நாட்டின் வளர்ச்சியை நிரந்தரமாக கெடுக்க வேண்டும் என்றே ஒருவரை மத்திய பா.ஜ.க. அரசு கவர்னர் ஆர்.என்.ரவியை நியமித்திருக்கிறார்கள். அவர் சமீபத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சேவையாற்ற அவர் வந்திருப்பதாக சொன்னதை கேட்டதுமே, சிரிப்புதான் வந்தது. தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறதாம். தீவிரவாதப் போக்கு நிலவும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதாம். தமிழ்மொழி வளர்ச்சிக்காக இங்கே எதுவும் நடக்கவில்லையாம். எல்லோரும் ஆங்கிலம் படிக்கிறார்களாம். இப்படியெல்லாம் அவதூறு, ஆற்றாமை கலந்து புலம்பியிருக்கிறார் ஆளுநர்.
மத்திய பா.ஜ.க. ஆட்சியில்தான் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்து, சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் பலியானார்கள்? மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தான் டெல்லி செங்கோட்டை அருகில் குண்டுவெடிப்பு நடந்து அங்கே மக்கள் பல பேர் பலியானார்கள்? பா.ஜ.க. ஆட்சியில்தான் மணிப்பூர் பற்றி இன்றைக்கு எரிந்து கொண்டிருக்கிறது? தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க. ஆட்சியை புகழ்ந்து பேசியிருக்கின்ற கவர்னர் அவர்கள், அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்கவேண்டும்.
இக்கட்டான சூழல்களில் எல்லாம், தன்னுடைய தேசப்பற்றைக் காட்டி, நம்முடைய படை வீரர்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்குவது நம்முடைய தமிழ்நாடுதான். அப்படிப்பட்ட தமிழர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கின்ற கவர்னரின் பேச்சு என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பதுபோல பேசுகிறார். அவர் வகிக்கின்ற அரசியல் சாசனப் பொறுப்புக்குத் துளியும் பொருத்தமற்ற, தகுதியற்ற தரக்குறைவான பேச்சு இது
எங்கள் பிள்ளைகள் உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். அதில், உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு எங்கே எரிகிறது? இன்னும் டபுள் மடங்கு ஆர்வமாக நாங்கள் ஆங்கிலம் படிக்க தயாராக இருக்கிறோம். இந்தியா முழுவதும் இந்தி பேசாத மாநில மொழிகள் இன்றைக்கு உயிர்ப்யுடன் இருக்கும் என்றால், அதற்கு காரணமே தமிழ்நாடு உயிரைக் கொடுத்து மொழிப்போரில் ஈடுபட்டதுதான். தாய்மொழிப் பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு நீங்கள் வகுப்பெடுக்க வேண்டாம் அந்த பாடத்தில் பி.எச்.டி. வாங்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலைஞர் பேரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்தால், அனுமதி கொடுக்காமல், மூன்று மாதம் கிடப்பில் வைத்து விட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். நான் கேட்கிறேன்… குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கின்ற அளவுக்கு, அதில் என்ன அரசியலமைப்புச் சட்ட பிரச்சினை இருக்கிறது? அவர் கிடப்பில் போட்டதை மறைக்க, குடியரசுத் தலைவர் மேல் பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார்.
“கலைஞர்” பேர் வைக்கக் கூடாது என்று மாணவர்களின் நலனில் விளையாடுவது என்ன நியாயம்? மக்களாட்சியை மதித்து, இதற்கான உரிய அனுமதியை விரைவில் கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறேன். இல்லையென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரையே நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பார்கள். விரைவில் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அந்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்! ஆனால், ஒன்று, கவர்னர் ரவி அவர்களே, நீங்கள் இப்படிதான் தொடர்ந்து பேசவேண்டும். உங்களுடைய தமிழ் வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்! நீங்கள் பேச பேசத்தான் எங்களுடைய வேலையும் ஈசியாகும்.
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சோஷியல் மீடியாவில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். 2024-25-ம் ஆண்டில், புதிய வழித்தடத்துக்கு ரெயில்வே துறையால், 31 ஆயிரத்து 458 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் நம்முடைய தெற்கு ரெயில்வேக்கு வெறும் 301 கோடிதான் ஒதுக்கியிருந்தார்கள். அதாவது, ஒரே ஒரு பர்செண்ட். ஒவ்வொரு முறையும் நம்முடைய பிரதமர் அவர்களை நான் சந்திக்கும்போதும், மறக்காமல் நான் வைக்கின்ற முக்கியமான கோரிக்கை - தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்ற புதிய ரெயில் திட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு அவர்கள் எடுத்திருக்கின்ற நடவடிக்கை என்ன? இந்த, ‘ஒன் பர்செண்ட்’ நிதி ஒதுக்கீடுதான். இதற்கு என்ன அர்த்தம்? “வரி வசூலிக்க மட்டும் தமிழ்நாடு; நிதி ஒதுக்கீட்டில் பட்டை நாமத்தை போடுகிறது.
பா.ஜ.க.-வின் ஆட்சி. இதிலிருந்து பா.ஜ.க. நமக்கு சொல்லாமல் சொல்லுகின்ற மெசேஜ் அரசியல் லாபங்களுக்காக பொதுமக்களை பழிவாங்கும் இந்த அற்ப அரசியல்தான் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு தொடர் தோல்வியை அளித்துக் கொண்டிருக்கிறது. முதுகெலும்பை இழந்து கர்சீப்பால் முகத்தை மூடிவிட்டு சுத்துகின்ற பழனிசாமி அவர்களின் துரோக அரசியல்தான் அவருக்கு, ‘பத்து தோல்வி பழனிசாமி’ என்ற பட்டப்பேரை பெற்றுத் தந்திருக்கிறது. மக்கள் மீதான எங்களின் உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் எங்களுக்கு தொடர் வெற்றியை அளித்து வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுகிறோம். அதுவும், மத்திய பா.ஜ.க. அரசு அளிக்கின்ற தொல்லைகள், செயற்கை பேரிடர்கள் அதையும் மீறியும் நிறைவேற்றுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை செம்மொழி பூங்காவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்
25 Nov 2025கோவை : கோவை செம்மொழி பூங்காவில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக விசாரணை
25 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக நேற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? - மேலிட பொறுப்பாளர் அசோக் விளக்கம்
25 Nov 2025சென்னை : த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா என்பது குறித்து மேலிட பொறுப்பாளர் அசோக் தன்வார் தெரிவித்துள்ளார்.
-
சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் : தொலைதொடர்பு துறை எச்சரிக்கை
25 Nov 2025புதுடெல்லி : சிம்கார்டை மற்றவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் தான் பொறுப்பு என்றும் தொலைதொடர
-
ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
25 Nov 2025மும்பை, ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையில் பிரம்மாண்ட பேரணி
25 Nov 2025பீகார், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
-
அயோத்தியில் பிரதமர் மோடி ரோடு ஷோ
25 Nov 2025அயோத்தி, அயோத்திக்கு வருகைதந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை பக்தர்கள் மத்தியில் காரில் சாலைவலம் வந்தார்.
-
பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை
25 Nov 2025சென்னை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார்.
-
நாளை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
25 Nov 2025சென்னை : சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங் களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
25 Nov 2025சென்னை : வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூட்டணி பலப்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
25 Nov 2025சென்னை : கூட்டணி பலப்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
-
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா செங்கோட்டையன்?
25 Nov 2025சென்னை : த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக வெளியான தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வடமாநிலத்தோருக்கு வாக்குரிமை வழங்கினால் புரட்சி வெடிக்கும்: பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை
25 Nov 2025நீலகிரி, மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் என்று என்று தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், வடமாநிலத்தோருக்கு வாக்குரிமை வழங்கினால் புரட்சி வெடிக்கும் என்று எச்சரிக்க
-
லாக் அப் மரணங்கள்: சுப்ரீம் கோர்ட் காட்டம்
25 Nov 2025புதுடெல்லி, காவல் நிலையங்களில் லாக் அப் மரணங்களை நாடு பொறுத்துக் கொள்ளாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2025.
26 Nov 2025 -
தோனிமடுவுவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோட்டிற்கு 6 புதிய அறிவிப்புகள்
26 Nov 2025ஈரோடு, அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலி
-
தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்பதா? ஈரோடு அரசு விழாவில் கவர்னருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
26 Nov 2025ஈரோடு, தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார்.
-
ரூ.4.90 கோடியில் மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்


