எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 குறைந்து புதன்கிழமை பவுன் ரூ.89,440-க்கு விற்பனையானது. தொடா்ந்து வியாழக்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.11,250-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.90,000-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், வா்த்தகம் நிறைவடையும் மாலையில் தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.11,320-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.90,560-க்கும் விற்பனையானது. அதன்மூலம், ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140, பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கம் விலை மீண்டும் குறைந்து விற்பனையானது. அதன்படி, அதன்படி, கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,270-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை நிலைவரம்
நேற்று வியாழக்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.165-க்கு விற்பனையான வெள்ளி விலையில் வெள்ளிக்கிழமை எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


