Idhayam Matrimony

டைட்டானிக் கப்பலில் எடுக்கப்பட்ட தங்க கடிகாரம் ரூ.20 கோடிக்கு ஏலம்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2025      உலகம்
Titanic-Watch-2025-11-24

லண்டன், டைட்டானிக் கப்பலில் எடுக்கப்பட்ட தங்க கடிகாரம் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றபோது அந்த கப்பல் பனிப்பாறையில் மோதியது. உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து 1997-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இதற்கிடையே அந்த கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன. அந்தவகையில் அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கடிகாரம் ஒன்று இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டது. இந்த கடிகாரம் சுமார் ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப்பொருட்களின் அதிகபட்ச ஏலத்தொகை ஆகும். இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியை தாண்டியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து