முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014
மேஷம்
aries-mesham
இன்று, உங்கள் நீண்ட நாள் நண்பரைச் சந்திந்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து தனவரவு உண்டாகும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று, உங்கள் செயல்களில் வெற்றி பெற மிகுந்த பிராயாசைப் பட நேரும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.
மிதுனம்
gemini-mithunum
இன்று, நன்கு பழகியவர்களே மோசம் செய்வர் எனவே, எவரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கவேண்டிய நாள். காரியத் தடைகளால் ஆர்வம் குறையும்.
கன்னி
virgo-kanni
இன்று, வாகன யோகம் உண்டு. இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு, இன்று பேச்சே மூலதனமாகும். அரசால் ஆதாயம் உண்டு.
மகரம்
capricorn-magaram
எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். தொழில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகலாம். வழக்குகளில் வெற்றி கேள்விக்குறியாகும்.
கடகம்
cancer-kadagam
இன்று, தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை அதிகரிக்கும். மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும் நாள். மனைவியின் ஒத்துழைப்புக் கிடைக்கும். பணவரவு உண்டு.
சிம்மம்
leo-simmam
தன்னம்பிக்கை கூடும் நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தாரிடையே வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கவனமாகப் படித்தால் தடைகளைத் தகர்த்தெரியலாம்.
துலாம்
libra-thulam
பெண்களால் பண விரயமாகும். கோபத்தைக் குறைப்பது நல்லது. திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.
மீனம்
pisces-meenam
வாகன, போஜன சுகங்கள் கூடி, அவருக்கு என்னையா பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள். காதல் வலையில் விழ நேரலாம். மனைவி மூலமாக நன்மைகள் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
இன்று, தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும். அதிகாரிகள் தொழில் விரிவாக்கத்துக்குத் துணைபுரிவர். அரசு ஆதரவும், அதிகாரிகளால் அனுகூலமும் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தனலாபமும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் மற்றும் எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும். கல்வியில் வெற்றி உண்டு. பெண்களால் லாபம் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு.
கும்பம்
aquarius-kumbam
அரசிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வேண்டாத விவகாரங்களால் மனக்கவலை ஏற்படலாம். மனைவியால் குடும்பத்தாரிடையே ஒற்றுமை குறையலாம்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்