முக்கிய செய்திகள்

கழுதைகளை காணவில்லை

முகப்பு

கழுதைகளை காணவில்லை

donky 2021 10 13

இன்றைய தலைமுறையினரில் பலர், கழுதைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பைக்கூட பெற்றிருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கழுதை வீட்டு விலங்காக இருந்தது. கழுதை தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று.  40 ஆண்டுகள் வரைகூட கழுதைகள் உயிர் வாழும்.

 

கழுதைகள் தற்போது வெகுவாக அருகி வருகின்றன. 2007 - 2012 காலகட்டத்தில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை 23% வீழ்ச்சி அடைந்தது. 2012 - 2019 ஆண்டுகளில் அது மேலும் 61.23% வீழ்ந்து, இப்போது வெறும் 1,20,000 கழுதைகள் மட்டுமே உள்ளன. இது உலகளாவிய போக்காக உள்ளது. சீனாவில் 1992-இல் ஒரு கோடியே பத்து லட்சம் கழுதைகள் இருந்தன; இப்போது வெறும் 26 லட்சமாகச் சுருங்கி விட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்: