முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்ஸ்டன்ட் டீ பேக் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது தெரியுமா?

Image Unavailable

பெரும் பாலும் ரயில் பயணங்களின் போது தேநீர் விரும்பிகளுக்கு கிடைக்கக் கூடிய அனுபவம்தான் இன்ஸ்டன்ட் டீ பேக். உடனடி தேயிலை பொட்டலம். சூடான நீரில் அல்லது பாலில் அதை அமிழ்த்தியவுடன் சுடச்சுட தேநீர் தயார். இது எப்போது யாரால் கண்டு பிடிக்கப்பட்டது தெரியுமா... அதுவும் மிகவும் தற்செயலாகத் தான் இது வடிவமைக்கப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..

1908 இல் நியூயார்க் நகரைச் சேர்ந்த தேயிலை வியாபாரி தாமஸ் சுல்லிவன் என்பவர் தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கு சிறிய சிலிக்கன் பைகளில் தேநீரை பார்சலாக அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதை பெற்ற வாடிக்கையாளர்கள் அதை பிரிக்காமல் அப்படியே சூடான நீர் அல்லது பாலில் கலக்க வேண்டும் என்று கருதி அதையும் சேர்த்து போட்டு கொதிக்க வைத்து பருகியுள்ளனர். இது சிறப்பாக இருப்பதாகவும் அவருக்கு கடிதமும் எழுதினர். பிறகென்ன அவரது பிசினஸ் மூளை இதை சிக்கென பிடித்துக் கொண்டு குட்டி குட்டி இன்ஸ்டன்ட் டீ பேக்குகளை வடிவமைத்து பேடன்ட் உரிமை பெற்று விற்கத் தொடங்கி... தற்போது நம்மூர் ரயில் நிலையம் வரையிலும் வந்து விட்டது என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்