முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலிய மாலுமிகள் மீது கடும் நடவடிக்கை: ஜி.கே.வாசன்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.21 - இந்திய மீனவர்களை இத்தாலிய கடற்படையினர் சுட்டுகொன்றது மன்னிக்கமுடியாதது மதிப்புமிக்க 2 உயிர்களை பறித்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பமுடியாது என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் 22 புதிய திட்டங்கள் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். அவற்றில் 5 அல்லது 6 திட்டங்கள் வரும் மார்ச் மாதத்தில் முடிவடைந்துவிடும் எனவும் வாசன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.6700 கோடி மதிப்பிலான திட்டங்கள் மும்பையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வாசன், எண்ணூர் துறைமுகத்தை சாலையுடன் இணைக்கும் பணி 2013​ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய மீனவர்கள் கொலை பற்றிப் பேசிய வாசன், இந்திய மீனவர்களை இத்தாலிய கடற்படையினர் சுட்டுக்கொன்றது மன்னிக்க முடியாத குற்றம் எனவும்,மதிப்புமிக்க இரண்டு உயிர்கள் பறிபோனது அவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று கூறினார்.இதுபற்றி விபரம் வருமாறு, கடந்த வாரம் கேரளா கொச்சி துறைமுகத்தில் இத்தாலிய கப்பலில் இருந்தவர்கள் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த குமரிமீனவர்களை திடீரென்று துப்பாக்கியால் சுட்டனர் இதில் இரண்டு மீனவர்கள் பலியானார்கள் இது பற்றி பேட்டி அளித்த போது மத்திய மந்திரி ஜி.கே.வாசன் இவ்வாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்