முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனியின் அடுத்த அதிபர் விரைவில் தேர்வு

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

பெர்லின், பிப். 22 - ஜெர்மனியின் அடுத்த அதிபராக அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர் ஜோசிம் கவுக் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.  ஜோசிம் கொள்கை தமது கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்தார். நாட்டில் நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக கட்சி பெரும்பான்மையுடன் உள்ளது. இதனால் மார்ச் 18 ம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜோசிம் கவுக் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. அதிபர் வேட்பாளராக ஜோசிம் கவுக் பெயரை அறிவித்து பேசிய ஏஞ்சலா, ஜோசிம் ஒரு ஜனநாயகவாதி. இப்போது ஜெர்மனி சந்தித்து வரும் யூரோ நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க சரியான நபர் அவர்தான் என்று குறிப்பிட்டார். முன்னதாக ஜெர்மனி அதிபராக இருந்த கிறிஸ்டியன் உல்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். 

தேர்தல் பிரச்சாரத்திற்காக தொழிலதிபர்களிடம் நிதியுதவி பெற்றது, தொழிலதிபர்களின் செலவில் விடுமுறையை கழித்தது, திரைப்பட இயக்குனர் ஒருவரின் நிறுவனம் வாங்கிய கடனுக்கு அரசு சார்பில் உத்தரவாதம் அளித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் உல்ப் மீது சுமத்தப்பட்டுள்ளன. 2010 ம் ஆண்டு ஜெர்மனி அதிபராக பதவியேற்ற உல்ப், ஜெர்மன் அதிபர்களிலேயே மிக இளம் வயதில் அதிபராக பதவியேற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்