முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.22 - அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இதற்கான ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதுகுறித்து அ.தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

13.4.2011 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்

விருத்தாசலம் (152), சூலூர் (116), திருக்கோயிலூர் (76), விருகம்பாக்கம் (22), ரிஷிவந்தியம் (78), ஒசூர் (55), திருச்செங்கோடு (96), லால்குடி (143), ஆரணி (67),பேராவூரணி (177), செங்கம் (தனி) (62), செங்கல்பட்டு (32), பட்டுக்கோட்டை (176), எழும்nullர் (தனி) (16), கும்மிடிnullண்டி (1), செஞ்சி (70), சோளிங்கர் (39), கம்பம் (201), தருமபுரி (59), சேந்தமங்கலம் (தனி) (93), கங்கவல்லி (தனி) (81), திருப்பரங்குன்றம் (195), மதுரை மையம் (193), விருதுநகர் (206), கூடலூர் (தனி) (109), ஆத்தூர் (129), திருவாடானை (210), பண்ருட்டி (154), திட்டக்குடி (தனி) (151), அணைக்கட்டு (44), குன்னம் (148), பத்மநாபபுரம் (232), மயிலாடுதுறை (161), வேப்பனஹள்ளி (54), திருவெறும்nullர் (142), மேட்டூர் (85), சேலம் (வடக்கு) (89), ஆலந்தூர் (28), ராதாபுரம் (228)

ஆகிய 41 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்று ஒப்பந்தம் ஜெயலலிதா, தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இடையே கையெழுத்து ஆனது. 

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்