திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் முதல் முறையாக மகாருத்ரயாகம்

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், பிப். - 28 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் திருக்கோயிலில் முதல் முறையாக மகாருத்ர யாகம் நேற்று நடந்தது. முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆதியில் சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டாலும் தற்போது முருகப் பெருமான் திருப்பெயரில் விளங்கி வருகிறது. மூலஸ்தானத்தில் முருகப் பெருமான், துர்க்கையம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வர்(சிவபெருமான்), பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 மூலவர்கள் மலையின் அடிவாரத்தில் குடைந்து வடிவமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இங்கு முருகப் பெருமானுக்கு அனைத்து திருவிழாக்களும் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக சிவபெருமானுக்கு நேற்று மகாருத்ரயாகம் நடைபெற்றது. 

அதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கோயில் திருவாச்சி மண்டபத்தில் 2 வெள்ளி குடங்கள், 11 வெள்ளிசெம்புகளில் புனித நீர் நிரப்பி வைத்து முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று 2 ம் கால யாகசாலை பூஜை முடிந்து குடங்கள் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு மூலவர் சத்தியகிரீஸ்வரருக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து குடங்களில் இருந்து புனித நீர் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து அலங்காரமாகி பூஜைகள், தீபாராதனை நடந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: