முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 2 மணி நேரம் வெளிமாவட்டங்களில் 4 மணி நேரமாக குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.- 28 - சென்னையில் 2 மணி நேர மின்வெட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது: வெளி மாவட்டங்களில்  மின்வெட்டு 4 மணி நேரமாக குறைந்தது. தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை உள்ளது. இதை கருத்தில் கொண்டு மின் வினியோகத்தை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 12 ஆயிரத்து 500 மெகாவாட். ஆனால் தற்போது 8 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. எனவே 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மின்வெட்டு உள்ளது. என்றாலும் இவற்றை முறைப்படுத்தி சீரான மின்சாரத்தை வழங்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை 1 மணி நேர மின்வெட்டு இருந்து வந்த சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  மின்வெட்டு நேற்று முதல்   2 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் சேப்பாக்கம், உயர்nullநீதிமன்றம், குறளகம், ஏழுகிணறு, காமராஜ் சாலை, எண்ணூர், கிண்டி, அண்ணாசாலை, நுங்கம்பாக்கத்தில் ஒரு பகுதி, அண்ணா நகர், அம்பத்தூர், nullந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. 10 மணி முதல் 12 மணி வரை சிந்தாதிரிப்பேட்டை, புரசைவாக்கத்தில் ஒரு பகுதி, தியாகராயநகர், எழும்nullர் ஆகியவற்றின் ஒரு பகுதி, ஆலந்தூர், கே.கே.நகர், போன்ற பகுதிகளில் 2 மணி நேர மின்வெட்டு இருந்தது. 12 மணி முதல் 2 மணி, 2 மணி முதல், 4 மணி, 4 மணி முதல் 6 மணி வரை என நகரின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று 2 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. மாதம் ஒருமுறை இந்த மின்தடை நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது.  சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இதற்கு முன்பு பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்து வந்தது. நேற்று முதல் அது 4 மணி நேர மின்வெட்டாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 4 மணி நேர மின்வெட்டு இருந்தது. எந்த நேரத்தில் எந்த பகுதிக்கு 4 மணி நேர மின்வெட்டு இருக்கும் என்பது பற்றிய அறிவிப்பு பகுதிவாரியாக வெளியிடப்பட்டு அதன்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது.  தொழிற்சாலைகளுக்கு 40 சதவீத மின்வெட்டும், வணிக பயன்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் மின்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1-​ந் தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருநாள் மின் விடுமுறை அமல்படுத்தப்படுகிறது. எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்த நாளில் மின் விடுமுறை என்ற விவரமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்விடுமுறை கடைபிடிக்கப்படும். இந்த கட்டுப்பாடுகள் மின்சார தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்